திருகோணமலையில் நிலைகொண்டிருக்கும் "டித்வா புயல்!

#SriLanka #Trincomalee
Mayoorikka
42 minutes ago
திருகோணமலையில் நிலைகொண்டிருக்கும் "டித்வா புயல்!

"டித்வா" ( Ditwah ) சூறாவளியானது தற்போது திருகோணமலையில் இருந்து தென் திசையாக சுமார் 50 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது வடக்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகர்கின்றது. ஆகையினால் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

 வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளதாவது, "டித்வா" ( Ditwah ) சூறாவளியின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதிலும் நிலவுகின்ற பலத்த காற்றும் கனத்த மழையுடனான வானிலையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். இதேவேளை இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பலத்த பெய்யக்கூடும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
சிறப்பு கட்டுரை